Monday, April 3, 2023

2.39 லட்சம் பேருக்கு ஆசிரியராக தகுதி இல்லை! அதிர்ச்சி தகவல்கள் ... !

trb news

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்வு எழுதிய 2.39 லட்சம் பட்டதாரிகள் ஆசிரியர் பணிக்கு தகுதி அற்றவர்கள் என்பதும் தேர்வு முடிவில் தெரியவந்துள்ளது.


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு கடந்த ஆண்டே நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.


சமூக அறிவியல் சரிவு


இரண்டாம் தாள் தேர்வு பிப்ரவரியில் நடந்தது. முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில் இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்ணும் மற்ற பிரிவினர் 82.5 மதிப்பெண்ணும் பெற்றால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தத


தேர்வில் 2.54 லட்சம் பேர் பங்கேற்றனர். 6 சதவீதமான 15 ஆயிரம் பேர் மட்டும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதும் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த பட்டியலை www.trb.nic.in என்றஇணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


பாடத்திட்டம் என்ன?


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆங்கிலம் கணிதம் அறிவியல் சுற்றுச்சூழல் அறிவியல் குழந்தைகள் மேம்பாடு தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு உருது ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெறுகின்றன


மொழி பாடங்களில் விருப்பமான பாடத்தை தேர்வர்கள் எடுத்து கொள்ள வேண்டும். முதல் தாளுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் இரண்டாம் தாளுக்கு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


தகுதி தேர்வு முடிப்பவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்படுவதில்லை. அடுத்து நடத்தப்படும் ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டி தேர்விலும் பங்கேற்க வேண்டும். 

அதில் தேர்ச்சி பெற்று முன்னிலை இடம் பெற்றால் மட்டுமே அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர முடியும். 2022 அக்டோபரில் நடத்த முதல் தாள் தேர்வில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர்; 21 ஆயிரத்து 543 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது தேர்வு எழுதியவர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


இதன் மூலம் முதல் தாளில் 1.32 லட்சம் பேர்; இரண்டாம் தாளில் 2.39 லட்சம் பேர் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் என்பதை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.

No comments:

Post a Comment