தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள தடயவியல் அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர்கள்(Junior Scientifi Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.36,900 முதல் ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலையை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: 4 சிக்கல்கள்! சிஎஸ்கே அணி உடனே மாற்ற வேண்டிய டாப் 4 விஷயங்கள்! தோனி ரேடாரில் முக்கிய வீரர் டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர்கள் (Junior Scientific Officer for Tamil Nadu Forensic sciences subboridnate service) பணியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
துறைவாரியாக பிரித்து பார்த்தால் வேதியியல் பிரிவில் 20 பேர், உயிரியல் பிரிவில் 4 பேர், இயற்பியல் பிரிவில் 3 பேர், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் 4 பேர் என மொத்தம் 31 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Recommended Video PTR ஆடியோவின் உண்மைத்தன்மையை கண்டறியவேண்டும் - துக்ளக் ரமேஷ், பத்திரிக்கையாளர் விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதும் அதிகபட்சமாக 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஆதிதிரவிடார்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம் இல்லை. வயது வரம்பு என்பது 1.7.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் தடயஅறிவியல் பிரிவில் எம்எஸ்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்எஸ்சி பிரிவில் வேறு பிரிவில் எம்எஸ்சி பிரிவில் Biology, Chemistry, Physics, Computer Forensic Science படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.36,900 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 100 வரை சம்பளம் கிடைக்கும்.
No comments:
Post a Comment