டி.என்.பி.எஸ்.சி 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் திட்டத்தை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் தேர்வுகளை சேர்த்து புதுப்பிக்கப்பட்ட ஆண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. புதிதாக எந்ததெந்த பணியிடங்கள், தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளும் நடத்தப்படுகிறது.
மேலும் தற்போது தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு டி.என்.பி.எஸ்.சி வழியாக செய்யப்படுகிறது.
இந்தநிலையில் டிசம்பர் இறுதியில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது. அட்டவணையில், தற்போது நடந்து முடிந்துள்ள முதல் நிலை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது திருத்தப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தேர்வு அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
உதவி ஜெயிலர் – 59 காலியிடங்கள்
உதவி சுற்றுலா அலுவலர் – 23
உதவி ஜியாலஜி இயக்குனர் – 19
உதவி மேலாளர் (சட்டம்) – 14
ஆராய்ச்சி உதவியாளர் – 4
உடற்கல்வி இயக்குனர் – 12
உதவி பயிற்சி அலுவலர் – 2
தொழில்நுட்ப பணியிடங்கள் – 130
தொழில்நுட்ப பணியிடங்கள் (வணிகம்) – 64
உதவி கால்நடை ஆராய்ச்சி அலுவலர் – 5
ஆவின் மேலாளர் – 24
குரூப் 1 பதவிகள் – 32
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் – 384
இளநிலை பகுப்பாய்வாளர் (மருத்துவம்) – 6
சமூகப் பணி சார்ந்த பணியிடங்கள் – 2
விடுதி கண்காணிப்பாளர் (வேலை வாய்ப்புத்துறை) – 18
உதவி ஆணையர் (தொழிலாளர்) – 4
தொழில்நுட்ப பணியிடங்கள் (சிறப்பு பிரிவுகள்) – 400
வேளாண்மை அலுவலர் – 81
தோட்டக்கலைத்துறை அலுவலர் – 120
குரூப் 4 தேர்வு – காலியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
புள்ளியியல் பணியிடங்கள் – 23
ஆய்வக உதவியாளர் – 25
குழந்தை பாதுகாப்பு அலுவலர் – 3
கணக்கியல் அலுவலர் – 8
உதவி அறிவியல் அலுவலர் – 29
இதுதொடர்பான முழுவிவரங்களை https://www.tnpsc.gov.in/static_pdf/annualplanner/ARP_2023_ENG_UPDATED.pdf என்ற இணையதளப் பக்கத்தில் பார்க்கவும்.
No comments:
Post a Comment