சில நேரங்களில் சில நிகழ்வுகள் அதிர்ச்சிகரமாகவும் அதேசமயம் அதிசயமாகவும் ஆச்சரியம் மற்றும். அதுபோன்றுதான் சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் தேர்வு பெற்று இருக்கிறது அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.
இது பற்றி கூறப்படுவது. அந்நிறுவனத்தை சார்ந்தவர்கள் மிகச் சிறப்பாக தரமான பயிற்சியை வழங்கி வருவதாகவும் 2000 மட்டும் இல்லை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் எங்களது நிறுவனத்தின் மூலம் சமீபத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் அதில் முதல் ஆறு தர வரிசை பெற்றவர்கள் அதே நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியை மிக கடினமாக இல்லாமல் ஸ்மார்டாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியான விடைகளை எப்படி அளிப்பது என்பது பற்றி மிக தெளிவான பயிற்சி அளித்துள்ளதாகவும் அதன் மூலம் தங்களது நிறுவனத்தை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர்,
No comments:
Post a Comment