பல்வேறு துறைகளில், 'குரூப் - 2' மற்றும் 'குரூப் - 2 ஏ' பதவிகளில், 5,446 காலியிடங்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், முதல் நிலை தகுதி தேர்வு, 2022ம் ஆண்டு மே மாதம் நடந்தது. இதில், 9.94 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகள், கடந்த நவம்பரில் வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 25ம் தேதி பிரதான தேர்வு நடத்தப்பட உள்ளது.
அதற்கான ஹால் டிக்கெட், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment