டிஎன்பிஎஸ்சி சார்பில் விவசாயம் மற்றும் தோட்டக்கலைத்துறையில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37,700 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்வேறு அரசு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள் எவ்வளவு?
டிஎன்பிஎஸ்சி சார்பில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் துறையில் காலியாக உள்ள 93 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேளாண் அலுவலர் (Agricultural Officer) பணிக்கு 37 பேர், வேளாண் உதவி இயக்குனர் (Assistant Director of Agriculture) பணிக்கு 8 பேர், தோட்டக்கலை அலுவலர் (Horticultural Officer) பணிக்கு 48 பேர் என மொத்தம் 93 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாத சம்பளம் என்ன?
மாத சம்பளம் என்ன?
வேளாண் அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37 ஆயிரத்து 700 முதல் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்படும். வேளாண் உதவி இயக்குனர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை வழங்கப்பட உள்ளது.
கல்வித்தகுதி
கல்வித்தகுதி
வேளாண் அலுவலர் பதிவிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் பிஎஸ்சி வேளாண் இளங்கலை பட்டம் மற்றும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும். வேளாண் உதவி இயக்குனர் பதவிக்கு எம்எஸ்சி Agricultural Extension அல்லது Agricultural Economics அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு தோட்டக்கலைப் பிரிவில் பிஎஸ்சி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு என்ன? வேளாண் அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அக்ரிகல்சர் பிரிவில் டிகிரி முடித்திருந்தால் 32 வயதுக்குள்ளும் அக்ரிகல்சர் பிரிவில் மாஸ்டர் டிகிரி அல்லது பிஎச்டி முடித்திருந்தால் 34 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வேளாண் உதவி இயக்குனர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். தோட்டக்கலை அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி தோட்டகலை படிப்பு முடித்திருந்தாலும் 32 வயதுக்குள்ளும், எம்எஸ்சி அல்லது பிஎச்டி முடித்திருந்தால் 34 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இருப்பினும் எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி(ஓபிசிஎம்), பிசிஎம் கணவரை இழந்த பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பம் செய்வது எப்படி? தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வுக்கட்டணமாக ரூ.200 என மொத்தம் ரூ.350 நிர்ணயம் செய்ய்பபட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment