Saturday, December 24, 2022

TNPSC காலிப்பணியிடங்கள் குறித்த புதிய அப்டேட் – தேர்வாணையத்தின் முக்கிய விளக்கம்!!

TNPSC காலிப்பணியிடங்கள் குறித்த புதிய அப்டேட் – தேர்வாணையத்தின் முக்கிய விளக்கம்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை இணையதளத்தில் வெளியிட்டது. இதில் குறைந்த அளவில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. 

இந்த நிலையில் இது தொடர்பாக தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.


காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை இணையதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. 

இதில் அடுத்த வருடம் 10 போட்டித்தேர்வுகள் மூலமாக 1754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக சமூக வலைதளங்களிலும் சில பத்திரிகைகளிலும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை தெளிவு செய்யும் வகையில் தேர்வாணையம் தற்போது விளக்கம் தெரிவித்துள்ளது.


Follow our Instagram for more Latest Updates

இது தொடர்பாக TNPSC வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை கண்டறிந்து தேர்வு கால அட்டவணையை வெளியிடுகிறது‌. 

இவ்வாறு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் அட்டவணை முதற்கட்ட தகவல்களை பார்ப்பதற்கு வெளியிடப்படுகிறது. இந்த அட்டவணையில் கூடுதலான காலிப்பணியிடங்கள் பெறப்படும் போது சேர்த்துக்கொள்ளப்படும்.

Exams Daily Mobile App Download


மேலும் இதை தவிர TRB,TNUSRB, TNFUSRC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலமாகவும் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதைத் தவிர அரசு பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. 

இது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு – மத்திய அரசின் ஒப்புதல்!

மேலும் சில போட்டி தேர்வுகளில் தொடரப்படும் வழக்கு காரணமாக பணியிடங்கள் நிரப்பப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் இதற்குரிய விதிகள் திருத்தப்பட்டு உரிய முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. 

மேலும் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் குறித்து வெளியாகும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேர்வர்களை TNPSC கேட்டுக்கொண்டுள்ளது.

 

No comments:

Post a Comment