தமிழ்நாடு வன சார்நிலைப் பள்ளியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பணிக்கான கணினி வழித் தேர்வு கடந்த 10.12.2022 அன்று நடக்கவிருந்தது. மாண்டஸ் புயல் காரணமாக அந்த தேர்வு அன்று ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது அந்த தேர்வு நடைபெறப் போகும் புது தேதியை அறிவித்துள்ளது அரசுப் பணியாளர் தேர்வாணையம். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின் படி, தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) தேர்வு வரும் 27-ம் தேதி முற்பகல் (09:30 - 12:30) மற்றும் பிற்பகல் (02:30 - 05:30) என இரு வேளைகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வர்கள் தேர்வுக்காக ஏற்கனவே டவுன்லோட் செய்த ஹால் டிக்கெட்டை பயன்படுத்தியே அவர்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்டுள்ள அதே மையங்களிலேயே தேர்வு எழுதலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஆனால், திருச்சி மாவட்ட தேர்வர்களுக்கு மட்டும் புதிதாக திருத்தம் செய்யப்பட்ட தேர்வு மைய நுழைவுசீட்டு டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வர்கள் மேற்கண்ட இணையதளம் மூலம் தங்களது OTR DASHBOARD-இல் உங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பயன்படுத்தி புதிய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment