Saturday, December 24, 2022

TNPSC Group 4 Results: குரூப் 4 கட் ஆஃப் குறையும்? ரிசல்ட் வெளியாகும் முன்பு முக்கிய முடிவு

government

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். 

இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: UPSC Exam: தவாங் மோதல், திருமண பலாத்காரம் உள்ளிட்ட முக்கிய சில டாபிக்ஸ் இங்கே!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடுவது தொடர்பான முடிவை ஜனவரி மாதத்தில் தான் தேர்வாணையம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே டிசம்பரில் ரிசல்ட் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

அதேநேரத்தில் குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்வாணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரிசல்ட் வெளியாகுவதற்கு முன்னரே காலியிடங்களின் அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமானலும், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதால், கட் ஆஃப் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

காலியிடங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப கட் ஆஃப் வெகுவாக குறையலாம் என்று தெரிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

No comments:

Post a Comment