Saturday, December 24, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்... முக்கிய அப்டேட்..

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பரில் வெளியாகும் என்று தெரிவித்த நிலையில் தற்போது முடிவுகள் டிசம்பரில் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.


7301 காலிப்பணியிடங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தற்போதைய தகவல் படி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குரூப் 4 தேர்வைத் தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் படிங்க: மாதம் ரூ.80,000 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி


2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையில் குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் குறிப்பிடப்படாத நிலையில் பணியிடங்கள் அதிகரித்தால் இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கே அதிக அளவில் வேலைவாய்ப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.


No comments:

Post a Comment