Saturday, November 12, 2022

TNPSC JOBS: ரூ.2,05,700 சம்பளத்தில் தமிழக கல்வித் துறையில் வேலை: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

tnpsc jobs 2022

தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நி்தியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 


பணி: நிதியாளர்(அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள்)


காலியிடங்கள்: 5


சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 2,05,700


வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து வயதுவரம்பு சலுகைகளை தெரிந்துகொள்ளவும்.


தகுதி: பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்(எம்பிஏ) முடித்திருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை: நேரடி ஆள்சேர்ப்பு படி கணினி வழித் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறும். 


விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.12.2022

No comments:

Post a Comment