குரூப் 1 தேர்வில் தமிழில் எழுதிய தேர்வுத்தாளை தமிழ்வழியில் படித்தவர்கள் மதிப்பீடு செய்யக்கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழில் எழுதப்பட்ட தேர்வுத் தாள் மதிப்பிடும் பணி திறமையான மதிப்பீட்டாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தமிழ் வழியில் படித்தவர் மட்டுமே விடைத்தாளை மதிப்பிட தகுதியானவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி விடைத்தாளை தமிழில் படித்தவரே மதிப்பிடக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆங்கில வழியில் பயின்றவர் தமிழராக இருந்தாலே சரியாக மதிப்பிடும் திறன் பெற்றிருக்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment