டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.
தமிழகத்தில் அரசு துறை அலுவலகங்களில், &'குரூப் - 2, 2 ஏ&' பதவிகளில் காலியாக உள்ள, 5,529 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இந்தாண்டு மே 21ல், முதல்நிலை தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வில், 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகள், ஆறு மாதங்களுக்கு பின், இம்மாதம் 8ம் தேதி வெளியாகின. இதில், ஒரு பதவிக்கு 10 பேர் வீதம், முன்னிலை மதிப்பெண் பெற்ற, 60 ஆயிரம் பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment