Thursday, October 20, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன்?

 TNPSC Group 2 Results Declaration: கிடைமட்ட இடஒதுக்கீடு (Horizontal Reservation) முறையை நடைமுறைப்படுத்தும் துவக்க நடவடிக்கையாக  ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பணியாளர் தேர்வாணையம்  ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது

குரூப் 2 தேர்வு மே மாதம் நடைபெற்றது. ஆண்டுகால தேர்வு  அட்டவணையின் படி ,செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும்.  இந்நிலையில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

ஏற்கனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் நடைமுறையில் இருந்த செங்குத்து  நகர்வுக்கு (Vertical Reservation) பதிலாக கிடைமட்ட நகர்வு முறை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. இந்த புதிய நடைமுறையின் படி,    மகளிருக்கு முதலில் 30% இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, மீதமுள்ள இடங்களில் போட்டியிட அனுமதி மறுக்கப்படும்.

இந்த, கிடைமட்ட இடஒதுக்கீடு (Horizontal Reservation) முறையை நடைமுறைப்படுத்தும் துவக்க நடவடிக்கையாக  ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பணியாளர் தேர்வாணையம்  ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த முன்மாதிரி ஆய்வின் அடிப்படையில்,  மென்பொருள் ஒன்றையும் தேர்வாணையயும் உருவாக்கம் செய்துள்ளது. 

எனவே, இந்த புதிய முறையின் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருப்பதால்,  கூடுதல் கால அவகாசம் ஆவதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே,தேர்வு முடிவுகள் குறித்த கால அட்டவணையை ( Results Declaration Schedule) சில தினங்களுக்கு முன்பு தேர்வாணையம்  வெளியிட்டது.

அதில்,  டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், டிசம்பர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்றும், பொறியியல் சேவை பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது. 

2018ல் அறிவிக்கப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான வாய்வழித் தேர்வு நீதிமன்ற வழக்குகளால் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment