டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு எழுதி, ரிசல்ட்க்காக காத்திருப்பவர்களுக்கும் தேர்வாணையம் நம்பிக்கை அளிக்கும் செய்தியை அறிவித்துள்ளது. அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை மே 21 ஆம் தேதி நடத்தியது. அப்போது முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்டில் வெளியிடப்படவில்லை.
இதற்கான காரணங்களாக, பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாலும் முடிவுகள் தள்ளி போவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு கடந்த 24 ஆம் தேதி ஒத்திவைக்கபட்டுள்ளது. இதனால், செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என்று தகவல் அறிந்தவர்களால் கூறப்படுகிறது.
இதனிடையே தேர்வாணையம் நேற்று செப்டம்பர் 2 ஆம் தேதி தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் செப்டம்பர் மாதத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிச்சயம் செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment