டிஎன்பிஎசி குரூப் 1 முதல் நிலை தேர்வு நவம்பர் 19ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் , வணிகவரித்துறை உதவி ஆணையர் , கூட்டுறவு துணைப் பதிவாளர் , ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்டத் தீயணைப்பு அதிகாரி என மொத்தம் 6 வகையான குரூப் 1 பணிகளுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆள் சேர்ப்பேன் மூலம் 92 பதவிகள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முதல் நிலைத்தேர்வு(Prelims), முதன்மைத் தேர்வு(Mains) மற்றும் நேர்காணல்(Interview) ஆகிய 3 கட்டங்களில் தேர்வு நடைபெறும் என்றும், முதல்நிலைத் தேர்வு இம்மாத இறுதியில் (செப்டம்பர் 30) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையும் வாசிக்க: சீருடைப் பணியாளர் தேர்வுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி: தமிழ்நாடு அரசு
இந்நிலையில், நிர்வாக காரணங்களினால் முதல்நிலைத் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " 30.10.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முதல்நிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 அன்று முற்பகல் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளது.
குரூப் 1 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த கூடுதல் கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment