ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதி மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு(எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு) வருகிற அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நிர்வாகக் காரணங்களினால் இந்தத் தேர்வு நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதன்படி, எழுத்துத் தேர்வு நவம்பர் 1 முதல் 5 வரையிலும் நேர்காணல் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் மாற்றப்பட்டுள்ள தேர்வு அட்டவணையை தெரிந்துகொள்ளலாம். #tnpsc #ias #ips #ifs
No comments:
Post a Comment