விருதுநகரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி
ஹைலைட்ஸ்:
டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு
தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தகவல்
விருதுநகர் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்திக்கு தயாராகுங்கள்: விநாயகர் சிலைகள், அலங்காரங்கள், பூஜைக்கு தேவையான பொருட்கள், வீட்டு அலங்காரம் மற்றும் பலவற்றை
திருமண மண்டபத்தில் ஏசி பொருத்திக் கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 30.10.2022 அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வபயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் 22.08.2022 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,சூலக்கரையில் நடைபெற உள்ளது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அடிதடி; 3 பேர் படுகாயம்.. சாத்தூரில் பரபரப்பு!
இப்பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டுநடத்தப்பட உள்ளது. மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் 22.08.2022 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment