TNPSC Group 4 apply online
TNPSC exam : டிஎன்பிஎஸ்சி போர்டலில் இந்த ஒன்டைம் ரிஜிஸ்டிரேசனின் மூலம் பதிவு செய்தபிறகு, டிஎன்பிஎஸ்சி அறிவிக்கும் எல்லாவித தேர்வுகளையும் ( நம் கல்வித்தகுதி அடிப்படையில்) எழுதலாம்.
How to Apply for TNPSC Group 4 Exam @tnpsc.gov.in : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, கடந்த மாதம் வெளியிட்டது. 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
How to apply in online : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான http://www.tnpsc.gov.in / http://www.tnpscexams.net / http://www.tnpscexams.in இணையதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
டிஎன்பிஎஸ்சி அமைப்பு நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் எனப்படும் ஒருமுறைப்பதிவு இன்றியமையாததாகிறது. தேர்விற்கு விண்ணப்பிக்கும்முன், இந்த பதிவு செய்வது அவசியம். இதனை, வேலைவாய்ப்புக்கான விண்ணப்பமாக கருதமுடியாது.
ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் செய்வது எப்படி?
1. டிஎன்பிஎஸ்சி லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கவும்
2. ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் படிவத்தை பூர்த்தி செய்யவும்
3. ஒன்டைம் ரிஜிஸ்டிரேசனுக்கான கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்
4 பின் ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோ, கையெழுத்து பிரதியை பதிவேற்றவும்
5. பின் submit பட்டனை அழுத்தவும்
6. பதிவு முடிவடைந்தவுடன், உங்கள் மொபைல் எண்ணிற்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வரும். அதனைக்கொண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வெற்றிகரமாக பதிவுசெய்யப்பட்ட ஒரு முறை பதிவு, பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அனைத்து விண்ணப்பங்களும் விண்ணப்பதாரர் பதிவு செய்த ஒரு முறை யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
ஒன் டைம் பதிவின் கீழ் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் புகைப்படம், சான்றிதழ் மற்றும் கையொப்பத்தை பதிவேற்ற தங்கள் புகைப்படம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றின் படத்தை ஸ்கேன் செய்திருக்க வேண்டும்.
ஒரு முறை பதிவில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு ஐடியை உருவாக்க எந்த விண்ணப்பதாரருக்கும் அனுமதி இல்லை.
டிஎன்பிஎஸ்சி போர்டலில் இந்த ஒன்டைம் ரிஜிஸ்டிரேசனின் மூலம் பதிவு செய்தபிறகு, டிஎன்பிஎஸ்சி அறிவிக்கும் எல்லாவித தேர்வுகளையும் ( நம் கல்வித்தகுதி அடிப்படையில்) எழுதலாம்.
TNPSC Group 4 exam : குரூப் 4 தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397
ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) – 2688
பில் கலெக்டர், கிரேடு – I – 34
பீல்டு சர்வேயர் – 509
டிராப்ட்ஸ்மேன் – 74
டைப்பிஸ்ட் – 1901
ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 784
முக்கிய தேதிகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019
தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் – ஜூலை 16, 2019
தேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019
கடைசி தேதி நீட்டிப்பு இல்லை : தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ( ஜூலை 14), தேர்வு நாள் செப்டம்பர் 01. தேர்விற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு (கடைசி தேதி) நீட்டிக்க இயலாது என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவிமைய எண்கள் : பதிவுக்கட்டணம், தேர்வுக்கட்டணம், தேர்வு குறித்த தகவல்கள் தொடர்பான விபரங்களுக்கு உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களான 044-25300336, 25300337, 25300338, 25300339 ஆகிய தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் அல்லது helpdesk@tnpscexams.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment