Sunday, February 13, 2022

கிராம நிர்வாக அலுவலகத்தின் பணிகள்

duties-of-village-administration-office



* கிராமக் கணக்குகளைப் பராமரித்தல்

* வருவாய்க் கிராம அளவிலான [[பிறப்பு]] மற்றும் [[இறப்பு|இறப்புகள்]] பதிவு செய்யப்படுகிறது. பின்பு இதற்கான சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்டவர்கள் கோரும் போது அதற்கான சான்றிதழ்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படுகின்றன.

* வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் [[கல்வி]], [[வேலைவாய்ப்பு]] மற்றும் பிற தேவைகளுக்கான சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவைகளைக் கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்குவதற்காக விண்ணப்பதாரரிடம் விசாரணை மேற்கொண்டு பரிந்துரை செய்யப்படுகின்றன.

* வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு வரி வசூலித்தல் அவற்றிற்கான நில உடமைச்சான்று, நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் [[பயிர்]] குறித்த விபரங்களுடைய பட்டா மற்றும் அடங்கல் சான்றுகள் வழங்க வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யும் பணிகள் செய்யப்படுகின்றன.

* வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற [[முதியோர்]], [[விதவைகள்]] போன்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் [[உதவித்தொகை]] வழங்க விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன.

* வருவாய்க் கிராம அளவிலான அனைத்து வருவாய்த்துறைப் பணிகளையும் செய்து வருகின்றனர். கிராமத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை அரசுக்கு தெரிவித்தல் இவா் மூலமே நடைபெறுகிறது.

*நில வரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

*பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவுகள் சங்கங்களிலிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல்.

*தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின்போது உடனுக்குடன் மேல் அலுவலா்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பீடு செய்யும் போது உடனிருத்தல்.

*கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல் மற்றும் விசாரணைக்கு உதவிபுரிதல்

காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் போன்ற தொற்று நோய்கள் பற்றி அறிக்கை அனுப்புதல்

Duties of Village Administration Office

*இருப்புப்பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்

*கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்

கட்டிடங்கள், மரங்கள், மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்

*புதையல்கள் பற்றி மேல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தல்

*முதியார் ஓய்வுதியம் வழங்குவது குறித்தான பனிகளைச் செய்தல்

*பொதுச் சொத்துக்கள் பற்றி டபதிவேட்டைப் பராமாத்தல்

*முதியார் ஓய்வுதியப் பதிவேட்டை பராமரித்தல்

*வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல்

*கிராமப் பணியாளர்களின் பணியை கண்காணித்தல்

*நில ஆக்கிரமிப்புகளை தடுப்பது மற்றும் மேல் அலுவலர்களுக்கு தொவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது

*சர்வே கற்களைப் பராமாப்பது

*கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்தான அறிக்கை அனுப்புதல்

*குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையைத் தொவிப்பது.

*வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல்

*கள்ளத் தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்

No comments:

Post a Comment