அரசு துறைகளில் குரூப் - 2, குரூப் - 2ஏ பதவிகளில், 5,529 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் பதிவு துவங்கிய நிலையில், மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
குரூப் - 2 பிரிவில் நேர்முக தேர்வுடன் கூடிய, 116 இடங்கள் மற்றும் குரூப் 2 ஏ பிரிவில், நேர்முக தேர்வு அல்லாத பதவியில், 5,413 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. முதல் நிலை எழுத்து தேர்வு மே 21ல் காலை 9:30 மணி முதல், பகல் 12:30 மணி வரை நடத்தப்படும். பின், பிரதான தேர்வு, 20 நகரங்களில் நடத்தப்படும்.
நேர்முக தேர்வு நடத்திய பின், தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் முதலில் வெளியிடப்படும். அதன்பின், நேர்முக தேர்வில் பணி பெற்றவர்களை தவிர்த்து, பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இதனால், நேர்முக தேர்வில் வாய்ப்பு கிடைக்காதவர்கள், நேர்முக தேர்வு அல்லாத பதவிக்கான தரவரிசையில் இடம்பெற முடியும்.
விண்ணப்ப பதிவு குறித்த சந்தேகங்களுக்கு, 1800 419 0958 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் helpdesk@tnpscexams.in என்ற இ- - மெயில் முகவரிக்கும் கடிதம் அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment