Wednesday, January 26, 2022

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் அறிவிப்பு

தமிழக அரசு துறைகளின் காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்திய நான்கு தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

* தமிழக தடய அறிவியல் சார்நிலை பணிகளில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் 72 காலியிடங்களை நிரப்ப 2019 ஆகஸ்டில் தேர்வு நடந்தது; 8851 பேர் இதில் பங்கேற்றனர்.

tnpsc group 4 results 2022


இந்த தேர்வு முடிவின்படி ஏற்கனவே 65 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள ஏழு இடங்களுக்கு வரும் 15ல் நேர்முக தேர்வு நடக்கிறது. இதில் 21 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

* தமிழக பொதுப்பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பணியில் 50 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நவ.6ல் தேர்வு நடந்தது. 

இதில் 4047 பேர் பங்கேற்றனர்.இந்த பணிக்கான முதன்மை தேர்வு இந்தாண்டு மே 6 7ல் நடக்க உள்ளது. இதில் 570 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

* வேலைவாய்ப்பு பயிற்சி பணியில் முதல்வர் மற்றும் உதவி இயக்குனர் பதவியில் ஆறு காலியிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிலவியல் சார்நிலை பணியில் 26 காலியிடங்களுக்கு நடந்த தேர்வுகளுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விபரங்களை டி.என்.பி.எஸ்.சி.யின்www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment