தமிழகத்தில் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால், TNPSC தேர்வு கட்டாயம். இந்த தேர்வுக்காக பல லட்சக்கணக்காக மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் இரவு பகல் பாராது படித்து தேர்வுக்கு தயாராகி வருகினறனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த தேர்வு குருப் 1 குருப் 2 குருப் 4 என பல வகைகளில் நடத்தப்படுகிறது.
இநநிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி வந்த பலரும் ஏமாற்றமடைந்தாலும், அடுத்த வருடம் நடைபெறும் தேர்வுககாக தயாராகி வருகினறனர்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த TNPSC தலைவர் அடுத்த வருடத்திற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்த திட்ட அறிக்கையில் குருப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும், அறிவிப்பு வெளியான அடுத்த 75 நாட்களில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்தார்.
மேலும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்போது பணியில் இல்லை என்றும், இனிமேல் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தேர்வு தொடர்பாக அறவிப்பை வெளியிட்ட அவர், தேர்வு எழுதும் அனைவரும் தமிழ் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அவ்வாறு தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வு எழுதியவரின் மற்ற தாள்கள் திருத்தப்படும் என்றும், தமிழில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மற்ற தாள்கள் திருத்தப்படாது என்றும் கூறிப்பிட்டிருந்தார்.
தமிழக வேலைவாய்ப்பு முழுவதும் தமிழர்களுக்கே கிடைக்கும் வகையில் இ்ந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டுளளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment