Monday, December 13, 2021

இத படிங்க முதல்ல ! " இல்லம் தேடிக் கல்வி ” திட்டத்திற்காக செயல்படவுள்ள ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்

 " இல்லம் தேடிக் கல்வி ” திட்டத்திற்காக மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படவுள்ள ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :

 கொரோனா பெருந்தோற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 1.5 மணிநேரம் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " எனும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளார். 

illam thedi kalvi thittam valikatuthal

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் அனைத்து செயல்பாடுகளுக்காக திறமை , அற்பணிப்பு , ஆர்வம் , சமூக அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் அனுபவம் , பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய பண்புகளைப் பெற்ற , 5 ஆசிரியர்கள் மாவட்ட அளவிலும் மற்றும் 2 ஆசிரியர்கள் ஒன்றிய அளவிலும் ( Exclusively for this purpose with rich experience in community mobilization ) பிரத்யேகமாக மாவட்டக் குழுவினால் அடையாளம் காணப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலரால் முழுநேரம் இப்பணிக்காக மட்டுமே நியமிக்க வேண்டும்.

இப்பணிக்கென பிரத்யேகமாக ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியில் கற்றல் கற்பித்தல் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும். 

" இல்லம் தேடிக் கல்வி ” திட்டத்திற்காக மாவட்ட அளவில் முழுநேரமாக செயல்படவுள்ள 5 ஆசிரியர்கள் மற்றும் ஒவ்வொரு ஒன்றிய அளவில் செயல்படவுள்ள 2 ஆசிரியர்களுக்கு கீழ்கண்ட வழிகாட்டுதல்களின்படி நடைமுறைபடுத்த அறிவுத்த வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் , அனைத்து விதமான திட்டமிடும் பணிகளில் பங்கெடுக்க வேண்டும் . இல்லம் தேடிக் கல்வி மாவட்ட கலைப்பயணக் குழுவுடன் பயணித்து , கலை நிகழ்ச்சியின் போது இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களைப் பதிவிடும் செயல்பாடுகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

மாவட்ட அளவில் நடைபெறும் கலைக்குழு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டு , வழித்தட ( Route Chart ) மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு புணிகளில் ஈடுபடுதல் வேண்டும் . மேலும் கலைக்குழுவினருக்கு தேவையான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

பள்ளிகளில் கலை நிகழ்ச்சி நடைபெறும் போது , தலைமை ஆசிரியர்கள் / பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் உரையாடி இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கிராமங்களில் சீரிய முறையில் செயல்பட களத்தைத் தயாரிக்க வேண்டும்.

பதிவு செய்த தன்னார்வலர்களிடம் , அவர்கள் ஏற்றுள்ள பணி எந்த அளவிற்கு சமூக முக்கியத்துவம் நிறைந்தது என்பதை உணர்த்த வேண்டும் . ஒவ்வொரு நாளும் இல்லம் தேடிக் கல்விச் சார்ந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்களை குறிப்பெடுத்து அதனை ஆவணப்படுத்த வேண்டும்.

மாவட்ட அளவில் ஒன்றிய ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் ஒன்றிய கருத்தாளர்கள் ஆகியோருக்கான பயிற்சியின் போது பங்கேற்க வேண்டும்.

ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உதவியுடன் , ஒன்றிய அளவில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்படும் போது உடனிருந்து வழிகாட்ட வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் முறையாக அமைப்பதற்கும் , இத்திட்டத்திற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும் அந்தந்த சார்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் / பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழிக்காட்டுதலை மேற்கொள்ள வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படத் தொடங்கிய பின் , அன்றாடம் சுழற்சி முறையில் மையங்களுக்கு சென்று பார்வையிட்டு , கற்கும் குழந்தைகளையும் தன்னார்வலர்களையும் மையங்களில் நடைபெறும் செயல்பாடுகள் குறிப்பிட்டு பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும் . மேலும் அச்செயல்பாடுகளை மேம்படுத்த தன்னார்வலர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்குதல் வேண்டும்.

ஒன்றிய அளவில் பணிகளை சிறப்பாகச் செயல்பட வைத்து , அவற்றைத் தொகுக்கும் பணியை ஒன்றிய ஒருங்கிணைப்பாளராகிய 2 ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் பணியை சிறப்பாகச் செயல்பட வைத்து , அவற்றைத் தொகுக்கும் பணியை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகிய 5 ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும்.

 மேலும் , மாவட்டங்களில் நிகழும் அனைத்து நிகழ்வுகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மாவட்ட தகவல் மற்றும் ஆவணக்காப்பு ( MDO ) ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்புதல் வேண்டும்.

மாவட்ட அளவில் 5 ஆசிரியர்கள் , ஒவ்வொரு ஒன்றிய அளவில் 2 ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் கிராமங்கள்- ஒன்றியங்கள் - மாவட்டம் ஆகியவற்றை வலுவாக இணைக்கும் மக்கள் பாலமாக இருக்க வேண்டும்.

 மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் இத்திட்டத்தில் செயல்படவிருக்கும் ஆசிரியர்கள் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளையும் குறைகளையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஏதுவான செயல்கள் மேற்கொள்ள வேண்டும் . 

மேற்காண் வழிமுறைகளை மாவட்டங்களில் தவறாது பின்பற்றுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

illam thedi kalvi thittam valikatuthal

illam thedi kalvi thittam valikatuthal

illam thedi kalvi thittam valikatuthal


No comments:

Post a Comment