மாயூரம் வேதநாயகம் பிள்ளை
ஊர் = திருச்சி மாவட்டம் குளத்தூர்
பெற்றோர் = சவரிமுத்துப் பிள்ளை – ஆரோகிய மரி அம்மை
தொடக்கக்கல்வியை தந்தையிடம் கற்றார்
ஆங்கிலம், தமிழ்மொழி = தியாகராச பிள்ளை என்பாரிடம் கற்றார்
பாப்பம்மாள் என்பவரை மணந்தார்
சிறப்புப்பெயர்
மறுமலர்ச்சி கவிஞர்
தமிழ் நாவல் உலகின் தந்தை
முதல் வசன நடை நூல் வித்தகர்
தமிழில் சட்ட நூல் தந்த முன்னோடி
இசைப் புலவர்
முதல் இந்திய நீதிபதி
முதல் தமிழ் நீதிபதி
பணி
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப் பாளராகவும் பணியாற்றிய பின் 1856-இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார்.
மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர்.
மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மொழிபெயர்ப்புப் பணி
கி.பி 1805 முதல் கி.பி. 1861-ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை அதாவது 56 ஆண்டுகள் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862-இல் வெளிட்டார்.
மேலும் 1862, 1863-ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார்.
நீதிமன்ற தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்
No comments:
Post a Comment