Friday, October 15, 2021

ஜே.இ.இ., தேர்வு முடிவுகள் வெளியீடு: டில்லி மாணவர் முதலிடம் | JEE Main result 2021

 புதுடில்லி: ஜே.இ.இ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், டில்லியை சேர்ந்த மிருதுல் அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த அக்.,3 ம் தேதி ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 1,41,699 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

jee main results


அதில், 41,862 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 6,452 பேர் பெண்கள். தேர்வு முடிவுகளை jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

டில்லி ஐஐடியை சேர்ந்த மிருதுல் அகர்வால்,360க்கு 348 மதிப்பெண்கள் எடுத்து, பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தனஞ்செயன் ராமன் என்பவர் அகில இந்திய அளவில் மாணவர்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 

இவர் தமிழகத்தை சேர்ந்தவர். டில்லி வாழ் தமிழராக துவாரகா பகுதியில் வசித்து வருகிறார். இவர் 360க்கு 320 மார்க்குகள் எடுத்துள்ளார்.

டில்லி ஐஐடி மண்டலத்தில், பெண்கள் பிரிவில் காவ்யா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். அவர் 286 மதிப்பெண்கள் எடுத்தார்.

No comments:

Post a Comment