வேலைநிறுத்த நாட்களில் பணி காலங்களாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலம் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2016, 2017 மட்டும் 2019 ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காலங்களுக்கு ‘பணிபுரியவில்லை என்றால் ஊதியம் இல்லை’ என்ற கொள்கை அடிப்படையில் ஊதியம் தரப்படவில்லை.
இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டம் காலமும், தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக முறைப்படுத்தப்படுகிறது. அரசு ஊழியர்களின் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், போராட்ட காலத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கையால் பதவி உயர்வு பாதித்திருந்தால் சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment