டிஎன்பிஎஸ்சி தேர்வுகலில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்த செய்திகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த முறைகேடுகளை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிரடி மாற்றம்:
விசாரணையில் முறைகேடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும்.
காலை 10 மணிக்கும் நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருதைத் தர வேண்டும். தேர்வெழுதும் தேர்வர்களின் மெய்த்தனமையை உறுதி செய்ய, விதியை விளக்க 2 மணிக்கே வரவேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment