ரேஷன் கார்டில் உள்ள உங்கள் மொபைல் எண்னை ஆன்லைன் மூலம் மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தோ அல்லது இ-சேவை மையத்திற்கோ சென்று மொபைல் எண்ணை மாற்றலாம்.
ரேஷன் கார்டில் மொபைல் எண் மாற்றம் :
இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் ஏழை, எளிய மக்கள் மலிவான விலையில் உணவுப் பொருட்களை பெற்று பயன் பெறுகின்றனர். ரேஷன் கார்டு மக்களின் ஒரு அடையாள அட்டையாக திகழ்கிறது. மேலும் இருப்பிட சான்றாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ரேஷன் கார்டுகள் மூலம் மக்கள் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை மாதந்தோறும் மலிவு விலையில் பெறுகின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கார்டு திட்டம் உள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகள் வைத்திருப்போருக்கு இலவச கொரோனா நிவாரண பொருட்களையும், நிதிகளையும் வழங்கியது. இந்த பேரிடர் காலத்தில் அரசின் நலத்திட்டம் மக்களுக்கு பேருதவியாக இருந்தது.
இந்த ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், குடும்ப அட்டை எண், வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். தற்போது ரேஷன் கார்டில் உள்ள உங்கள் மொபைல் எண்ணை ஆன்லைன் மூலம் மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் மொபைல் எண் மற்றும் வழிமுறைகள் :
முதலில் https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
அதில் அப்டேட் மொபைல் எண் என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு அதில் தோன்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில் முதலில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இரண்டாவதாக உங்கள் ரேஷன் கார்டு நம்பரை உள்ளிட வேண்டும்.
அதில் உங்கள் மொபைல் புதிய எண்ணை பதிவிட்டு SAVE கொடுக்கவும்.
பிறகு உங்கள் மொபைல் எண் மாற்றம் அடைந்து விடும்.
#மொபைல்நம்பர் #ரேசன்கார்டு #குடும்பஅட்டை #ஆன்லைன்
No comments:
Post a Comment