Tuesday, December 29, 2020

நிரந்தர பதிவு எண் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவேண்டும்- டி.என்.பி.எஸ்.சி.

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி. எஸ்.சி.) நடத்தும் போட்டி தேர்வுகளின் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தனது நிரந்தரப்பதிவுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஒரு ஆதார் எண்ணை ஒரு நிரந்தர பதிவிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் ஆதார் சட்டம் 2016-ன் படி விண்ணப்பதாரர்களின் ஆதார் குறித்த விவரங்கள் தேர்வாணையத்தால் சேமிக்கப்படமாட்டாது.


 

மேலும் ஆதார் எண்ணை விண்ணப்பதாரரின் நிரந்தரப்பதிவில் இணைப்பதற்கான வழிமுறைகள், அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி குறித்தான விவரங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpscexams.in -ல் வெளியிடப்பட்டு உள்ளன.


இது குறித்தான பின்னூட்டத்தினை (பீட்பேக்) அளிக்கவும் அந்த இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு எண்ணை வைத்திருக்கும் தேர்வர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment