Tuesday, December 29, 2020

குரூப்-1 தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி | group 1 exam date 2021

 தமிழகத்தில் துணை ஆட்சியர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்கள் உள்பட மொத்தம் 69 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக குரூப்-1 முதல்நிலைத் தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.


 

இதனையடுத்து தற்போது ஊரடங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட குரூப்-1 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 69 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத்தேர்வு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும்.


தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நவம்பர் 2 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment