TNPSC EXAM பொருத்தவரை "தமிழில்" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையாத்தால் நடத்தப்படும் இந்த தேர்வு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் எழுதலாம். நீங்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, தேர்வு எந்த மொழியில் எழுதலாம் என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு வாய்ப்பு அதில் வழங்கப்பட்டிருக்கும்.
அதில் தேர்வு மொழி யை தேர்வு செய்து விண்ணப்பித்துவிட்டால் போதும். தமிழ்/ஆங்கிலம் என்ற இரு மொழிகளில் ஏதேனும் ஒன்றை விருப்ப மொழியாக தேர்வு செய்து விண்ணப்பித்தப்பிறகு உங்களுக்கு HALL TICKET வரும். குறிப்பிட்ட தேதியில் தேர்வுக்கு அழைப்படுவீர்கள். அதில் விருப்பமான மொழியில் தேர்வு எழுதிவிட்டு வரலாம்.
Group IV, Group II தேர்வுகள் OMR sheet எனப்படும் தாளில் , கொள்குறி வகை வினாக்களில் விடையை shade செய்வதாக அமைந்திருக்கும்.
அதில் சரியான விடையை அந்த எண்ணுக்குரிய வட்டவடிவ/சதுர வடிவ இடத்தில் "பால்பாயின்ட்" பேனா கொண்டு இடைவெளியில்லாமல் Shade செய்ய வேண்டும். இதை கவனமாக செய்ய வேண்டும். புள்ளி வைப்பதோ, அரைகுறையாக நிரப்புவதோ கூடாது. இதனால் சரியான விடையை தேர்ந்தெடுத்தாலும், அதற்கான மதிப்பெண்ணை இழக்க நேரிடும். விடைகள் அனைத்தும் கணினி மூலம் திருத்தப்படுவதால் முழுமையாக தீட்டப்பட்ட விடைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இதற்கு கடைகளில் விற்கும் மாதிரி OMR SHEET களை வாங்கி பயற்சி எடுத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment