இது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
&'குரூப் - 4&' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ள, ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, டிச., 5 முதல், 18 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
பதிவேற்றம் செய்தவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, கவுன்சிலிங் தேதி, டி.என்.பி.எஸ்.சி.,இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உள்ளவர்கள், மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம். அதே நேரம், கூடுதலாக, 27 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் மட்டும், தங்கள் சான்றிதழ்களை, பிப்., 18க்குள், &'இ - சேவை&' வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment