Saturday, January 25, 2020

தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள வாய்பாடு

எண்கள் எப்படியோ, அதுபோல தமிழிலில் எழுத்துரு எண்கள் உள்ளன. அவற்றை நினைவில் வைப்பது என்பது மிக கடினம். காரணம் இதுவரைக்கும் நாம் Numeral எண்ணை மட்டுமே கணக்கில் படித்துப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். எனவே 1 முதல் 10 வரை உள்ள தமிழ் எழுத்துருக்களை மனணம் செய்து நினைவில் வைப்பது என்பது சற்று சிரமமான காரியம். 

ஆனால் வாய்ப்பாடு அல்லது உருவ முறையில் தமிழ் எண்களை மிக எளிதாக நினைவில் வைத்து எழுதலாம். அப்படி உருவாக்கப்பட்ட வாய்ப்பாடு இது. 

ஒரு ன்னத்தில் இரண்டு ம்மா
மூன்று சங்கும் நான்கு லைங்கையும்
ஐந்து ரூபாய் ஆற்றில் சும்மா நீந்தாதே
ஏழு ப்படியோ எட்டும் ப்படியே
ஒன்பது கூறாதே



tamil engal ninaivil vaikka vaippadu


இதில் தமிழ் எழுத்துக்கள் - எண்கள் வரிசை கிரம மாக வந்து அமைகிறது. படத்தைப் பார்த்தும் மிக எளிதாக அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளலாம். 

  • க எழுத்து ஒன்றையும், 
  • உ எழுத்து இரண்டையும்
  • ங் எழுத்து மூன்றையும்
  • ச எழுத்து நான்கையும்
  • ரூ எழுத்து ஐந்தையும்
  • சு எழுத்து ஆறையும்
  • எ எழுத்து ஏழையும்
  • அ எழுத்து எட்டையும்
  • கூ எழுத்து ஒன்பதையும்

 குறிக்கின்றன. 

#தமிழ்எண்கள் #வாய்ப்பாடு #நினைவில்வைக்க


No comments:

Post a Comment