ஒருமை - பன்மை பிழைகளை நீக்குதல்
1. தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன - தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது
2. ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றது - ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றன
3. மரத்தில் பழங்கள் பழுத்தன - மரங்களில் பழங்கள் பழுத்தன
4. குயில் மயில் ஒன்றாய் இருந்தன - குயிலும் மயிலும் ஒன்றாய் இருந்தன
5. தோட்டத்தில் மாடுகள் மேய்கிறது - தோட்டத்தில் மாடுகள் மேய்கின்றன
6. அன்று பார்த்தப் பெண் அவள் அல்ல - அன்று பார்த்தப் பெண் அவள் அல்லள்
7. சில வீரர்கள் கீழே விழுந்தனர் - வீரர்கள் சிலர் கீழே விழுந்தனர்
8. பள்ளியில் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள் - பள்ளியில் குழந்தைகள்
பாடங்களைப் படிக்கிறார்கள்
9. குதிரை வேகமாக ஓடின - குதிரைகள் வேகமாக ஓடின
10. முருகன் கவிதை எழுதுகிறார் - முருகன் கவிதை எழுதுகிறான்
11. அணை உடைகின்றன - அணைகள் உடைந்தன
12. மான்கள் காட்டில் மேய்ந்தது - மான்கள் காட்டில் மேய்ந்தன
13. புலிகள் வந்தது, எருதுகள் ஓடியது - புலி வந்தது, எருதுகள் ஓடின
14. தமிழர் திரைகடல் ஓடி திரவியம் தேடினார் - தமிழர் திரைகடல் ஓடி திரவியம்
தேடினர்.
15. கோயிலில் திருமுழுக்கும் கூட்டு வழிபாடும் நடந்தது - கோயிலில் திருமுழுக்கும் கூட்டு வழிபாடும் நடந்தன.
No comments:
Post a Comment