Friday, March 24, 2023

TNPSC vao tips வி.ஏ.ஓ தேர்விற்கு தயாராகும் தோழர்களே உங்களுக்குத் தேவையான டிப்ஸ் !

tnpsc vao exam tips

வணக்கம் தோழர்களே! எப்படியிருக்கீங்க? பலநாட்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..

சில பல காரணங்களால் வலைப்பக்கம் வர முடியாமற்போனது. இனி தொடர்ந்து வலைப்பக்கத்தில் பயணிக்கலாமென இருக்கிறேன்..

விரைவில் நடைபெறவிருக்கிற வி.ஏ.ஒ தேர்வுக்காக பல பேர் தயாராகிக்கொண்டிருப்பார்கள்..அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் உதவும் வகையில் "கிராம நிர்வாகம்" என்ற பகுதியை விரிவாக பதிவிடலாம் என்றிருக்கிறேன்.


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கிராம நிர்வாகம் என்றொரு தனிப்பகுதி தேர்வில் இல்லை..குரூப் 4 வினாத்தாளைப் போன்றுதான் இருந்தது.இந்தத் தேர்வில் வெற்றி பெற்று நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு செல்லும்போது அப்பணி குறித்த அடிப்படை அறிவு இல்லாமல் பலர் திணறிப்போய் திறம்பட செய்ய இயலாமல் தலையாரிகள் என்று சொல்லக்கூடிய கிராம உதவியாளர் சொல்ல சொல்ல கேட்டு செய்யும் அளவிற்கு சிரமப்பட்டார்கள்.

இதை கருத்தில் கொண்ட தேர்வாணையம் சாதாரண குரூப் 4 தேர்வு போல அல்லாமல் வி.ஏ.ஓ தேர்விற்கு தனியாக ஒரு பாடத்திட்டத்தை தயார் செய்தது.  புதிதாய் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்ட பகுதிதான் கிராம நிர்வாகம் என்பதாகும்..

              கிராம நிர்வாகத்தைப்பற்றி நாளை முதல் ஒவ்வொரு தலைப்பிலும் விரிவாகக் காண்போம்.

                                    1.பட்டா
                                    2.சிட்டா
                                    3.அடங்கல்
                                    4.அ பதிவேடு
                                    5.புலப்படம்
                                    6.கிராமப்படம்

உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட பதிவேடுகள் கணக்கு புத்தகங்கள் மற்றும் முக்கிய பணிகள் அவரது பொறுப்புகள் ஆகியவற்றைப் பற்றி வரும் பதிவுகளில் காண்போம்.

No comments:

Post a Comment