Friday, January 15, 2016

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு தயாராவது எப்படி?

தமிழ்நாட்டில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மூலைக்கு மூலை முளைத்துக் கிடக்கின்றன. ஆனால் இப்படி டி.என்.பி.எஸ்.சி தேர்வு பயற்சி மையத்திற்கு போய்தான் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.

TNPSC Group 2, Group 4 தேர்வுக்கு தயாராவது எப்படி?



  • இதற்கென்று  தனியா கைடு, புத்தகம் எதையும் வாங்கத் 
  • தேவையில்லை. குரூப் 4-க்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கும்  இருக்கும் ஸ்டேட் போர்டு புத்தகங்கள், குரூப் 2-க்கு 
  • அதனுடன் சேர்த்து +1, +2 வரலாறு, புவியியல் இதைப் படித்தாலே போதும், 
  • எல்லாவற்றையும் படிப்பதைவிட பாடத் திட்டத்தை அறிந்து கொண்டு படிக்க வேண்டும். 
  • குரூப்4, குரூப்2 இரண்டுக்குமே அறிவியல் 20, கணக்கு 10, அரசியல் 10, வரலாறு 10, புவியியல் 10, பொருளியல் 10, பொது அறிவு 20, இதர கேள்விகள் 10, மொத்தம் 100, பொது தமிழ் 100 என மொத்தம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்.
  • பொது தமிழில் அ முதல் ஒள வரைக்குமான பாடத்திட்டம்; அகர வரிசை, 
  • ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல், இலக்கணக் குறிப்பு, உவமையால் விளக்கப்படுதல், எதிர்ச்சொல் போன்றவைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். 
  • சமூக அறிவியலில் முக்கிய தினங்கள், ஐ.நா., சார்க் அமைப்புகள், வங்கி, தமிழ்நாடு ஆறுகள்... இதைப் பற்றி ஒரு கேள்வி 
  • கண்டிப்பாக இருக்கும். 
  • கணக்கு என்றால் முக்கோணவியல், எண்ணியல், அளவிடல், 
  • பகுமுறை வடிவியல், வடிவியல்; குரூப் 2-க்கு கூட்டுச் சராசரி, இடைநிலை அளவு, முகடு...இதிலிருந்து ஒரு கணக்கு கண்டிப்பாக வரும். 
  • பொது அறிவுக்கு தினசரி நாளிதழ்களைப் படித்து குறிப்பு எடுத்து வைத்தாலே போதுமானது. 


படிக்கிறபோது கோடு வேர்டு (Code Word) வைத்து படிக்க வேண்டும். உதராணமாக சோடியம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் இதை 'சோகாபொமெ’ என மனதில் வைத்துக்கொண்டால், எளிதாக மனதில் பதியும். மறக்கவும் மறக்காது.

இப்படி கடினமாக உள்ளதை கோர்வேர்ட் மூலம் மிக எளிதாக மாற்றி படிக்கும்பொழுது, மிக எளிதாக அதிக எண்ணிக்கையில் கேள்விகளுக்கான பதில்களை தவறில்லாமல் மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும்.

ஒரு முறை தேர்வில் தோல்வி அடைந்தாலும், தளராது தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் டி.என்.பி.எஸ்.சி தேர்விகள் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

தளராத நம்பிக்கையும், தொடர் முயற்சியும், புத்திசாலித்தனமான தாயாராதல் இருந்தால் வெற்றி உங்கள் வசம்தான்.

No comments:

Post a Comment