Sunday, December 13, 2015

TNPSC - VAO - ஸ்டடி மெட்டீரியல் - 2015

TNPSC VAO EXam Basic Study Meterials for Free


டி.என்.பி.எஸ்.சி வி.ஏ.ஓ ஸ்டடி மெட்டீரியல்: 


ஒரு கிராமத்தை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றிருப்பதால்தான் அவருக்கு கிராம நிர்வாக அலுவலர் என்று பெயர். நிலம் தொடர்பான விபரங்களை பராமரிப்பதில் வி.ஏ.ஓ0.வின் பங்கும் உண்டு.

இருதுறைகள் நிலம் தொடர்பான விபரங்களை பராமரிக்கின்றன.

1. பதிவுத் துறை
2. வருவாய்த்துறை


I. பதிவுத்துறை: நிலம் வாங்கும்போது / விற்கும்போது அதற்குரிய கிரயப்பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் [Sub-Registration]பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை

வருவாய்த்துறையில் நிலத்திற்கான

பட்டா - Patta
சிட்டா - Chitta
அடங்கல் - Adangal
அ - பதிவேடு - A Register
நில வரைபட எல்லை - FMB

பட்டா: 

பட்டாதான் நில உரிமைக்கான ஆதாரம். பட்டாவில் பெயர் உள்ளவர்க்குத்தான் அந்த நிலத்திற்கான உரிமை உண்டு.

பட்டாவில் 1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர், கிராமத்தின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர், புல எண்ணும் உட்பிரிவும், நன்செய் நலம்/ புன்செய் நிலம், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும்.

சிட்டா: தனி நபர் ஒருவருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இந்த சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், எந்த வகையில் நிலம் நன்செய் நிலமா அல்லது புன் செய் நிலமா, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இதில் இருக்கும்.

அடங்கல் - Adangal


ஒரு கிராமம் முழுமைக்கும் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு இது. அடங்கல் பதிவேட்டில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விபரங்கள் இருக்கும்.

'அ' பதிவேடு - A Register

இந்த பதிவேட்டில்

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், [Survey Number and Subdivision],
2. ரயத்துவாரி (ர), சர்க்கார் (ச) அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு) மானாவரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விபரங்கள் இருக்கும்.



No comments:

Post a Comment