தமிழ் மொழியில் உள்ள தொகைச்சொற்கள் இவை: தொகைச் சொற்கள் என்பது ஒரு தொகுதியில் வரிசைப்படுத்தும் சொற்கள் என பொருள் கொள்ளலாம். வார்த்தைகளைப் படித்தாலே தொகைச் சொற்கள் என்றால் என்ன என்ற புரிதல் ஏற்படும்.
தமிழில் உள்ள தொகைச் சொற்கள்:
- இருமை - இம்மை, மறுமை
- இருவினை - நல்வினை, தீவினை
- இருதிணை - உயர்திணை, அஃறிணை
- இருசுடர் - ஞாயிறு, திங்கள்
- ஈரெச்சம் - வினையெச்சம், பெயரெச்சம்
- மூவிடம் - தன்மை,முன்னிலை, படர்க்கை
- முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
- முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
- முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
- முக்காலம் - இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
- மூவேந்தர் - சேரன், சோழன், பாண்டியன்
- முக்கனி - மா, பலா, வாழை
- நான்மறை - ரிக், யசூர், சாம, அதர்வணம்
- நாற்குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
- நாற்படை - தேர், யானை, குதிரை, காலாள்
- நாற்றிசை - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, நாற்பால்
மேலும் சில தொகைச் சொற்கள் உண்டு. அவற்றை கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்து PDF வடிவில் "டவுன்லோட்" செய்துகொள்ளலாம்.
பண்பு தொகை இதில் எது
ReplyDelete