Saturday, August 17, 2013

இலக்கிய நூல்களும், அவற்றில் அடங்கியுள்ள பகுதிகளும்

தமிழ்மொழியின் வளத்தை, பெருமையை காட்டும் இலக்கிய நூல்கள் பல. அவற்றின் மூலம் நாம் தமிழ்மொழியின் தொன்மையையும், அதன் அரும்பெருமைகளையும் படித்தறிய முடியும். அவ்வகையான நூல்கள், அவற்றில் அடங்கியுள்ள பகுதிகள், அதிகாரங்கள்.

தொல்காப்பியம்: தொன்மையான நூல் இது. இதில் மூன்று அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்கள் உள்ளன. 

திருக்குறள் (வள்ளுவம்): மூன்று பால்கள், 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள் அடங்கியுள்ளன.


சிலப்பதிகாரம்: இதில் 3 காண்டம், 30 காதைகள், 5001 வரிகள் உள்ளன. 

மணிமேகலை: 30 காதைகள், 4755 வரிகள் உள்ளன. 

சீவக சிந்தாமணி: இதில் 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள் உள்ளன. 

பெரியபுராணம்: இதில் இரண்டு காண்டங்கள், பதிமூன்று சருக்கங்கள், 4286 பாடல்கள் உள்ளன. 

கம்பராமாயணம்: இதில் ஆறு காண்டங்கள், 118 படலங்கள், 10589 பாடல்கள்

நல்லாபிள்ளை பாரதம்: 18 பருவங்கள், 11000 பாடல்கள் உள்ளன. 

கந்த புராணம்: ஆறு காண்டங்கள் 135 படலம், 10345 பாடல்கள் உள்ளன. 

திருவிளையாடற் புராணம்: மூன்று காண்டங்கள், 3363 பாடல்கள் உள்ளன. 

தேம்பாவணி: இதில் மூன்று காண்டங்ள், 36 படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன. 

சீறாப்புராணம்: இதில் மூன்று காண்டங்கள், 92 படலங்கள், 5027 பாடல்கள் அடங்கியுள்ளன. 

இரட்சணிய யாத்திரிகம்: 5 பருவங்கள், 47 படலங்கள், 3775 பாடல்கள் உள்ளன. 

இராவண காவியம்: இதில் ஐந்து காண்டங்களும், 57 படலங்களும், 3100 விருத்தங்களும் அடங்கியுள்ளன.

ஏசு காவியம்: இது ஐந்து பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகளும் கொண்டது. 

குறிப்பு: மற்றெந்த மொழிகளைவிட தமிழ்மொழியில்தான் அளவுக்கதிகமான பாசுரங்கள் நிரம்ப உள்ளது.

No comments:

Post a Comment