டி.என்.பி.எஸ்.சி யின் புதிய பாடத்திட்டத்தின் படி தமிழ் அறிஞர், "தமிழ் தாத்தா" உ.வே.சா அவர்களைப் பற்றிய கேள்விகள் இடம்பெறும். அதற்குப் பயன்படும் விதமாக தமிழறிஞர் - தமிழ்தாத்தா உ.வே.சா அவர்களைப் பற்றிய பயனுள்ள தகவல் குறிப்புகளை இங்கு காண்போம்.
இவருடைய முழுமையான பெயர் உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகனார் சாமிநாதன் என்பதாகும்.
அவரைப் பற்றிய மேலதிக விபரங்களை கேள்வி-பதில்கள் வடிவில் பார்க்கலாம்.
- உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் எது?
- திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
- உ.வே.சா அவர்களின் ஆசிரியர் யார்?
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- உ.வே.சா. விரிவாக்கம் என்ன?
- உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்
- உ.வே.சா பிறந்த ஆண்டு ?
- 19.2.1855
- உ.வே.சா இயற்கை எய்திய ஆண்டு?
- 28.4.1942
- உ.வே.சா அவர்களின் சிறப்பு பெயர்
- 'தமிழ் தாத்தா'
- உ.வே.சா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதிய இதழின் பெயர்?
- ஆனந்த விகடன்
- உ.வே.சா அவர்களின் தமிழ்பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்?
- சூலியஸ் வின்சோன், ஜி.யு.போப்
- உ.வே.சா அவர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் மத்திய அரசு அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
- 2006.
- உ.வே.சா நூல்நிலையம் செயல்பட்டுகொண்டிருக்கும் நகரம்..
- சென்னையில் உள்ள பெசன்ட்நகர்
- இந்நூல் நிலையம் அமைக்கப்பெற்ற ஆண்டு 1942.
உ.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்களின் பட்டியல்:
- எட்டுத்தொகை நூல்கள் - 8
- பத்துப்பாட்டு - 10
- சீவக சிந்தாமணி - 1
- சிலப்பதிகாரம் - 1
- மணிமேகலை - 1
- புராணங்கள் - 12
- உலா - 9
- கோவை - 6
- தூது - 6
- வெண்பா நூல்கள் - 13
- அந்தாதி - 3
- பரணி - 2
- மும்மணிக்கோவை - 2
- இரட்டை மணிமாலை - 2
- இதரபரபந்தங்கள் - 4
No comments:
Post a Comment