free books, e-books for higher study students
கல்லூரி மாணவர்களுக்கான நூல்களைப் பெற இத்தளம் பயன்படுகிறது. உயர்கல்விப் பயிலும் மாணவர்களுக்கும் அவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் நூலங்கள் கொடுக்கும் புத்தகங்களைத் தவிர மற்ற துறைச் சார்ந்த புத்தகங்களை அளிக்கிறது www.bookboon.com என்ற இணையதளம்.
இத்தளத்தில் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய உயர்கல்விக்குத் தேவையான புத்தகங்களை PDF கோப்புகளாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இத்தளத்தில் நூலின் தலைப்பு, நூல் ஆசிரியர் பெயர் அல்லது நூலின் பொருள் தொடர்புடைய வார்த்தைகளை உள்ளிட்டு வேண்டிய நூல்களைப் பெற முடியும்.
தேடல் முடிவில் நூல்கள் பட்டியலிடப்படும். தேவையான நூலின் மீது இரட்டை கிளிக் செய்தால் அந்நூலானாது PDF BOOK வடிவில் உங்களுடைய கணினியில் தரவிறங்கிவிடும்.
ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள், பட்டப் படிப்பு மாணவர்கள் என அனைத்து துறைச் சார்ந்த மாணவர்களுக்கும் இத்தளம் மிகவும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
தளத்தின் முகவரி: http://bookboon.com/
நன்றி..!
- தங்கம்பழனி
No comments:
Post a Comment