வரலாற்றுக்கு முற்பட்ட காலம் - சில முக்கிய குறிப்புகள்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்றால் என்ன?
வரலாற்றினை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை
1.வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
2. வரலாற்றுக் காலம்
1.வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றி, படிமங்கள், புதைபொருள்கள், எலும்புகள் ஆகியவற்றின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். அக்காலத்தையே வரலாற்றுக்கு முந்தைய காலம் என்கிறோம்.
2. வரலாற்றுக் காலம்
அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் , மற்றும் பிற ஆதாரங்கள் உடைய காலத்தையே வரலாற்றுக் காலம் என்கிறோம்.
கற்காலம் - (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலம்.)
கற்காலத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. பழைய கற்காலம்
2. புதிய கற்காலம்
மேலும் சில குறிப்புகள்:
- மனிதர்கள் முதன் முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு.
- செம்பைப் பயன்படுத்திய நாகரீகம் ஹரப்பா நாகரிகம் ஆகும்.
- இரும்பை பயன்படுத்தியது வேதகால நாகரீகம்.
No comments:
Post a Comment