Thursday, January 3, 2013

விடுதலை வீரர்கள்

பாலகங்காதர திலகர் 

பாலகங்காதர திலகர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் பிறந்தவர்.
அவர் நடத்திய பத்திரிகைகள் மராத்தா, கேசரி என்பவை.
பாலகங்காதர திலகர் தீவிரவாதிகளின் தலைவராக இருந்தவர்.
"லோகமான்யா" என்ற பட்டப்பெயரால் இவர் அழைக்கப்படுகிறார்.
பாலகங்காதர திலகர் எழுதிய நூல்: கீதா ரகசியம்.

கோகலே

மிதவாதப் பிரிவின் தலைவர் கோபால கிருஷ்ண கோகலே.
கிருஷ்ண கோகலேவை காந்தியடிகள் தமது அரசியல் குரு என குறிப்பிட்டார்.
இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் இவரே.

சர்தார் வல்லபாய் படேல்

இந்தியாவின் இரும்பு மனிதர்
இந்திய பிஸ்மார்க்
கஜினிமுகமது வால் அழிக்கப்பட்ட சோமநாதபுரம் கோயிலை புதுப்பித்து பொலிவூட்டியவர் இவரே.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

வங்கச்சிங்கம் எனப் போற்றபட்டவர்.
ஒரிசா மாநிலத்தில் கட்டக் கில் பிறந்தார்.
காந்தியடிகளின் அறப்போர் முறையை எதிர்த்தவர்.
இந்திய தேசிய ராணுவம் (INA) அமைத்தார்.
புகழ்பெற்ற "ஜெய்ஹிந்த்", "டில்லி சலோ" என்ற முழக்கங்கள் இவருடையதே.

அன்னிபெசன்ட்

பிரம்மஞான சபையை இந்தியாவில் வளர்த்தவர்.
இவர் அயர்லாந்தைச் சேர்ந்தவர்.
பிரம்மஞான சபை தோன்றிய இடம் அமெரிக்கா.
நிறுவியர்கள் பிளாவாட்ஸ்கி அம்மையார், ஆல்காட்.
மிதவாதிகளுக்கும், தீவிர வாதிகளுக்குமிடையே ஒற்றுமை ஏற்படுத்த அவர் ஆரம்பித்த இயக்கம் சுயாட்சி இயக்கம் (Home Rule Movement)

அரவிந்த கோஷ்
தீவிரவாதியாக இருந்து பின் மிதவாதியாக மாறியவர் இவர்.
இவர் ஆசிரமம் அமைத்தது பாண்டிச்சேரியில்.
இவரது முக்கிய நூல் தெய்வீக வாழ்க்கை (Life Divine)

பகத்சிங்

புரட்சி மூலமே சுதந்திரம் பெற முடியும் என்ற புதிய இயக்கம் தொடங்கியவர் பகத்சிங்.
சமதர்மக் குடியரசுப் படையை அமைத்தவர் பகத்சிங்
மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசியவர்கள் பகத்சிங்கும் அவரது நண்பர் தத் என்பவரும்.
இதன் தொடர்பாக தூக்கிடப்பட்டவரகள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ்.

மகாத்மா காந்தி


  • மகாத்மா காந்தி பிறந்த நாள் 2-10-1869
  • பிறந்த இடம் குஜராத்தில் போர்பந்தர்
  • அண்ணலின் தந்தை, தாய் கரம்சந்த் காந்தி, புத்லிபாய்.
  • துணைவியார் கஸ்தூரிபாய்.
  • முதல் போராட்டம் தென்னாப்பிரிக்காவில்
  • இந்தியாவில் முதல் போராட்ட களம் சம்பரான்
  • சம்பரான் போராட்டம் நடந்த ஆண்டு 1915
  • போராட்டத்தின் பெயர் இண்டிகோ அவரி பயிரிட்ட தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம். 
  • மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவர் ஆன ஆண்டு 1920.
  • நாட்டுப் பிரிவினையின்போது அவர் நடத்திய யாத்திரை நவகாளி.


  • நவகாளி மேற்கு வங்கத்தில் உள்ளது. 
  • கோட்சே அவரை சுட்ட நாள் 31-01-48
  • உயிர் துறந்த இடம் டில்லி பிர்லா மாளிகை மைதானம். 
  • காந்தியின் சுயசரிதை My Experiments with Truth.
  • இந்நூலை தமிழாக்கம் செய்தவர் அமரர் கல்கி. 
  • கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ண மூர்த்தி.
  • காந்தியடிகள் நடத்தி பத்திரிகைகள் ஹரிஜன், நவ இந்தியா
  • இவர் எளிய உடைக்கு மாறியது மதுரையில். 
  • காந்தியைப் பற்றி கல்கி எழுதிய நூல் மாந்தருள் ஒரு தெய்வம்.
  • மகாத்மா என்ற பட்டம் வழங்கியவர் கவிஞர் தாகூர். 



No comments:

Post a Comment