Wednesday, September 19, 2012

VAO - பொது அறிவு வினா - விடைகள் -1

VAO - General knowledge
1. இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகா சாசனம் எனப்படுவது எது?

சார்லஸ் வுட்டின் அறிக்கை

2. தார் கமிஷன் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரச்சினை

  மாநிலங்களை மாற்றியமைத்தல்

3. "இந்திய அடிப்படை உரிமைகளின் தந்தை" எனப்படுபவர்

டாக்டர் ஆர். அம்பேத்கர். 

4. ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிப்ப்ளிகன் சங்கத்தின் முழக்கம்

 இன்குலாப் ஜிந்தாபாத்

5. காந்தி முதன் முதலில் உண்ணாவிரதமிருந்தது எதற்காக?

அகமதாபாத் மில் வேலை நிறுத்தத்தில்

6. 1909ஆம் ஆண்டு மின்டோ-மார்லி சீர்த்திருத்தச் சட்டத்தின் முக்கியவத்துவம் என்ன ?

அது தனித் தொகுத்திக்கு ஏற்பாடுத செய்தது. 

7. பண்டிட் ஈஸ்வர சந்திர வித்யா சாகரின் பெயருடன் தொடர்புடையது

விதவைத் திருமணம்

8. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய வாணிகத்தின் மீதான சர்வாதீன உரிமை ரத்து செய்யபட்ட ஆண்டு

கி.பி. 1805

9. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?

ஜஸ்டிஸ் பாத்திமா பீவி. 

10. 1962ல் சீனா இந்தியாவுடனான தனது யுத்தத்தை தன்னிச்சையாக முடிவுக்குக் கொண்வந்ததன் காரணம்?

ஐ.நா சங்கம் தலையிட்டது.

11. பிரார்த்தனை சமாஜத்தின் இயல்பு அல்லாத ஒன்று எது?

சுத்தி இயக்கம் மூலம் இந்து சமயத்திற்கு மறுமலர்ச்சி அளிப்பது

12. தஞ்சை பெரிய கோயில் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதின் காரணம் என்ன?

இதன் எண்பது டன் எடையுள்ள சிகரம் ஒரே கல்லாகும். 

13. அமெரிக்காவில் காதர் கட்சியை அமைத்தவர் யார்?

ஹர்தயாள்

14. எம்.கே. காந்தியின் அரசியல் குரு யார்?

கோபால கிருஷ்ண கோகலே..

15.  சுய ஆட்சிக் கொடியை பறக்க விட்டவர் யார்?

தாதாபாய் நௌரோஜி

16. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?

அன்னி பெசண்ட்

17.  சுதந்திர இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளுநராக இருந்த முதல் இந்திய பெண்மணி யார்?

சரோஜினி நாயுடு. 

18. 'செர்-யே-பஞ்சாப்' என்று பரவலாக அழைக்கப்படும் இந்தியத் தலைவர் யார்.?

லாலா லஜபதி ராய்

19. அன்னி பெசண்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட சுய ஆட்சி இயக்கதின் தலைநகர் எது?

அடையாறு. 

20. இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையகம் செயல்பட்ட இடம் எது?

சிங்கப்பூர். 




No comments:

Post a Comment