Friday, August 17, 2012

ஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)

ஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் "பார்" என்ற சொல் "காண்" பார்த்தல் என்ற பொருளில் வரும். அதேபோல "உலகம்" என்ற பொருளிலும் வரும். ஆக "பார்" என்ற சொல் பார்த்தல் அல்லது உலகம் என்ற இரு வேறு பொருளைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். இடமறிந்து இவற்றின் பொருளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறான சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்

ஒரு சொல் தரும் இருபொருள்

பார்: உலகம், காண்
இசை: புகழ், பாட்டு, இனிய ஒலி
நாண்: வெட்கப்படு, கயிறு
மெய்: உடல், மெய்யெழுத்து
திரை: அலை, திரைச்சீலை
மறை: வேதம், மறைத்து வை
பிடி: பெண்யானை, பிடித்துக்கொள்
படி: பாடம் படி, படிக்கட்டு
திங்கள்: சந்திரன், மாதம்
வலி: வலிமை, நோவு


இதுபோன்ற சில சொற்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் கொடுக்க வல்லன. இவ்வகைச் சொற்களை அறிந்துவைத்துக்கொள்வது டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழ் கேள்வித்தாள் பகுதிகளை எதிர்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழை முழுமையாகப் படித்து தேர்வை எதிர்கொள்ளும்போது தேர்வில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். நன்றி நண்பர்களே..!


1 comment: