Sunday, July 15, 2012

TNPSC - VAO வலைப்பதிவு - ஓர் அறிமுகம்.

வணக்கம் நண்பர்களே.. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் TNPSC போட்டித் தேர்வுகளில் வெற்றிப்பெற உதவும் நோக்குடன் எனக்குத் தெரிந்த, நான் படித்தவைகளை, இணையத்திலுள்ள பல பயனுள்ள தகவல்களை உங்களுடன் பகிரும் நோக்குடன் இவ்வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன்..

பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தச் சேவையைச் செய்ய முன் வந்திருக்கிறேன். TNPSC மட்டுமல்ல... தமிழ்நாடு ஆசிரியர் பணிகளுக்காக நடத்தப்படும் TRB, TNTET போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் குறிப்புகளையும், தேர்வில் வெற்றிப் பெற தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற குறிப்புகளையும் வழங்க திட்டமிட்டுள்ளேன்.  "தங்கம்பழனி" வலைத்தளத்திற்கு தந்த ஆதரவை இந்த தளத்திற்கு தந்துதவ வேண்டுகிறேன்...

தங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடமும், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் நண்பர்களிடம் நம்முடைய தளத்தை அறிமுகப்படுத்தி உங்களுடைய பேராதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

இப்படிக்கு,
உங்கள்
தங்கம்பழனி.


நன்றி நண்பர்களே..!!

No comments:

Post a Comment