Wednesday, July 25, 2012

தமிழ் இலக்கணத்தின் வகைகள்

வணக்கம் நண்பர்களே.. ! கடந்த பதிவில் தமிழ் இலக்கண அறிமுகப் பகுதியைப் பார்த்தோம்.. அதில் தமிழ் இலக்கணம் என்றால் என்ன, இலக்கணத்தின் வகைகள் என்ன? ஒவ்வொரு இலக்கணத்திற்கும் எடுத்துக்காட்டுகளுடன் கூடிய விளக்கங்களுடன் அடுத்தப் பதிவைப் பார்க்கலாம் என்று கூறியிருந்தேன். இன்றைய பதிவில்.. இலக்கணத்தின் வகைகளைப் பற்றி அறியலாம். இலக்கணம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்த்துவிடுவோம்..

இலக்கணம் என்பது ஒரு மொழியை தவறில்லாமல் கற்கப் பயன்படும் ஒரு விதிமுறையாகும். இந்த விதிக்குக் கட்டுப்பட்டுதான் அம்மொழி இயங்கும். அதுதான் இலக்கணம்.

தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைகள் உள்ளன.

அவை நாம் சிறுவயதில் படித்ததுதான். என்றாலும் மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்த இங்கு தருகிறேன்.

1. எழுத்திலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கணம் 4. யாப்பிலக்கணம், 5. அணியிலக்கணம்

tamil ilakkanathin vagaigal


எழுத்திலக்கணம்:

எழுத்து இருவகைப்படும். அவைகள்:
அ. முதலெழுத்து      ஆ. சார்பெழுத்து

அ.முதலெழுத்து:

அ முதல் ஔ வரையிலான உயிரெழுத்து பன்னிரண்டும், க் முதல் ன் வரையிலான மெய்யெழுத்து பதினெட்டும் முதலெழுத்து எனப்படும்.

ஆ.சார்பெழுத்து:

முதலெழுத்தை சார்ந்து இயங்கும் எழுத்துக்கள் சார்பெழுத்துகள் எனப்படும். சார்பெழுத்துகள்  பத்து வகைப்படும். அவைகள்:

1.உயிர்மெய்              6.குற்றியலிகரம்

2.ஆய்தம்                    7.ஐகாரக்குறுக்கம்

3.உயிரளபெடை      8.ஔகாரக்குறுக்கம்

4.ஒற்றளபெடை      9.மகரக்குறுக்கம்


5.குற்றியலுகரம்      10.ஆய்தக்குறுக்கம்



tamil ilakkanam in tamil

No comments:

Post a Comment