Wednesday, July 18, 2012

சாளுக்கியர்களின் ஆட்சி - வரலாறு

வணக்கம் நண்பர்களே.. இந்தப் பதிவில் வராற்றில் சாளுக்கியர்களின் ஆட்சிக்காலம் என்ன? அவர்களுள் முக்கியமானவர்கள் யார்? அவர்கள் செய்த சாதனைகள் என்ன? முற்கால சாளுக்கியர்கள், பிற்கால சாளுக்கியவர்கள் இதுபோன்ற விபரங்களை இப்பதிவின் வழி தெரிந்துகொள்வோம்.

சாளுக்கியர்களின் ஆட்சி காலம் என்ன?


1. முற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 6-8 நூற்றாண்டுகள்)

2. பிற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 10-12 நூற்றாண்டுகள்)

3. கீழை சாளுக்கியர் (கி.பி. 7-12 நூற்றாண்டுகள்)


முற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 6-8 நூற்றாண்டுகள்)

தற்போது பதாமி என்று அழைக்கப்படும் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வாதாபி தலைநகராக விளங்கியது.

வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் முதலாம் புலிகேசி

சாளுக்கிய அரசர்களில் மிகச்சிறந்தவர் இரண்டாம் புலிகேசி (கி.பி.610-642)

இரண்டாம் புலிகேசி. பல்லவமன்னன் மகேந்திரனை வென்றார்.

இரண்டாம் புலிகேசியை பல்லவமன்னன் மகேந்திரனின் மகன் நரசிம்மவர்மன் படையெடுத்துச் சென்று கொன்றார். எனவே நரசிம்மவர்மன் வாதாபி கொண்டான் என அழைக்கப்பட்டான்.

பிற்கால மேலை சாளுக்கியர் :

கல்யாணியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.

பிற்கால மேலை சாளுக்கிய மரபை தொடங்கியவர் இரண்டாம் தைலப்பா

சிறந்த மன்னர் இரண்டாம் சோமேஸ்வரன்

கல்யாணியை ஆண்ட சாளுக்கியர்களில் இறுதி அரசர் முன்றாம் தைலப்பா

கீழை சாளுக்கியர்கள் :
இரண்டாம்புலிகேசியின் சகோதரரான விஷ்ணுவர்த்தன் கீழை சாளுக்கிய மரபைத் தொடங்கினார்.

இவர்கள் பல தலைமுறைகளாக மேலை சாளுக்கியர்களிடமிருந்து தனித்து ஆட்சி செய்தனர்.

கீழை சாளுக்கியர்கள் தலைநகரம் - வெங்கி

தெலுங்கு சமுதாயம். தெலுங்கு இலக்கியம் சிறப்பான வளர்ச்சி அடைந்திருந்தது.

சோழ மரபுடன் திருமண உறவு வைத்தக்கொண்டனர்

இத்திருமண உறவின் வழியாக தோன்றிய வாரிசே குலோத்துங்கசோழன்.

குலோத்துங்கசோழன் கீழை சாளுக்கிய நாட்டினை சோழப்பேரரசுடன் இணைத்துக்கொண்டார்.

குலோத்துங்கசோழன் கீழை சாளுக்கிய மரபின் கடைசி மன்னராவார்.

சாளுக்கியர்களைப் பற்றிய தகவல்கள் போதுமானதாக இருந்ததா? இல்லையென்றால் குறிப்பிடுங்கள்.. இன்னும் விரிவான தகவல்களை பதிவில் பகிர்கிறேன். நன்றி..!

No comments:

Post a Comment